பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. குயில் பத்து நீல உருவின் குயிலே நீள்மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழும் கொடிமங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திருஉத்தர கோசமங்கை ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக் கூவாய் (3) தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே இது கேள் நீ வான்பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித்து உள்ளம் புகுந்து என்உணர்வு.அது ஆய ஒருத்தன் மான்பழித்து ஆண்டமென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய் (4) சுந்தரத்து இன்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் o முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடி யானைச் சேவகனை வரக் கூவாய் (5 ) --