பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கோயில் மூத்த திருப்பதிகம் உகந்தானே அன்பு:உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன் சகம்தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ மகம்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குஉன் முகம்தான் தாராவிடின் முடிவேன் பொன்னம் பலத்துஎம் முழுமுதலே முழுமுதலே ஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழிமுதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமிக் கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ என்று அழும்.அதுவே அன்றி மற்றுஎன் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே அரைசே பொன்னம் பலத்துஆடும் அமுதே என்றுஉன் அருள்நோக்கி இரைதேர் கொக்குஒத்து இரவுபகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துஉன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசாது இருந்தால் ஏசாரோ 550 (4) (5)