பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கோயில் மூத்த திருப்பதிகம் ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர்எல்லாம் பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின் அருளே தேசா நேசர் சூழந்துஇருக்கும் திருவோ லக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்துஆடும் எந்தாய் இனித்தான் இரங்காயே இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன் என்றுஎன்று ஏமாந் திருப்பேனை அரும்கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார் இலி மாடு ஆவேனோ நெருங்கும் அடியார்க்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாஎன்று அருளாயே அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்துஆண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருள்.ஆர் மனத்தோடு உனைப்பிரிந்து வருந்து வேனை வாஎன்றுஉன் தெருள்.ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ 552 (6) (7) (8)