பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கோயில் மூத்த திருப்பதிகம் சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுஉன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்துஉன் திருநாமம் தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர்முன்னே நரிப்புஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே நல்காது ஒழியான் நமக்குஎன்றுஉன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா, வாழ்த்தா, வாய்குழரு வணங்கா மனத்தால் நினைந்துஉருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி பொன்னம்பலம் என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்குஇரங்கி அருளாய் என்னை உடையானே 554 (10)