பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துஅன்ன வெள்நகையாய் முன்வந்து எதிர்எழுந்து என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ஊறித் தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடை திறவாய் பத்து உடையிர் ஈசன் பழஅடியிர் பாங்கு உடையிர் புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கு எல் ஒர் எம்பாவாய் (3) ஒள்நித்திலம் நகையாய் இன்னம் புலர்ந்தின்:ே வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒரு மருந்தை வேதவிழுப் பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக்கசிந்து உள்ளம் உள்நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் ஏல் ஒர் எம்பாவாய் (4)