பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கோயில் திருப்பதிகம் அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்று உருக்கிப் பொய் இருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே திருப்பெருந் துறைஉறை சிவனே உரைஉணர்வு இறந்துநின்று உணர்வதுஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும்ஆறு உணர்த்தே (3) உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே இணங்குஇலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பு:அறுக்கும் எம்மருந்தே திணிந்தது.ஒர் இருளில் தெளிந்த து வெகு திருப்பெருந் துறைஉறை சிவனே குணங்கள்தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி.என்ன குறையே (4) குறைவுஇலா நிறைவே கோதுஇலா அமுதே ஈறுஇலாக் கொழும்சுடர்க் குன்றே மறையும்ஆய் மறையின் பொருளும்ஆய் வந்துஎன் மனத்திடை மன்னிய மன்னே சிறைபொறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறைஉறை சிவனே இறைவனே நீளன் உடல்இடம் கொண்டாய் இனிஉன்னை என்இரக் கேனே ■ (5) .560