பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கோயில் திருப்பதிகம் இரந்துஇரந்து உருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரம்தனில் பொலியும் கமலச் சேவடியாய் திருப்பெருந் துறைஉறை சிவனே நிரந்த ஆகாயம் நீர்நிலம் தீகால் ஆய்அவை அல்லை ஆய்ஆங்கே கரந்தது.ஒர் உருவே களித்தனன் உன்னைக் கண்உறக் கண்டுகொண்டு இன்றே (6) இன்றுஎனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பு:அற நினைந்தேன் நீஅலால் பிறிதுமற்று இன்மை சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றுஆம் திருப்பெருந் துறைஉறை சிவனே ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார்உன்னை அறியகிற் பாரே (7) பார்பதம் அண்டம் அனைத்தும்ஆய் முளைத்துப் படர்ந்தது.ஒர் படர்ஒளிப் பரப்பே நீர்உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்அருள் வெள்ளச் சீர்உறு சிந்தை எழுந்தது.ஒர் தேனே திருப்பெருந் துறைஉறை சிவனே ஆர்உறவு எனக்குஇங்கு யார்அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும்என் சோதி (8) 562