பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அடைக்கலப் பத்து பெரும் பெருமான் என் பிறவியை வேர் அறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான் சதுரப் பெரு மான் என்மனத்தின் உள்ளே வரும் பெருமான் மலரோன் நெடு மால் அறியாமல் நின்ற அரும் பெருமான் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில் நின்கழல் புணை கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க் கடல் வாய்ச் சுழி சென்று மாதர்திரை பொரக் காமச் சுறவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே சுருள்புரி கூழையர் சூழலில் பட்டுஉன் திறம் மறந்து இங்கு இருள்புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண் வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள் புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே (4) (5)