பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தைந்தாவது ஆசைப் பத்து ஆத்தும இலக்கணம் (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் கருளக் கொடியோன் காண மாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்துஇங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஒ இருளைத் துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (1) மொய்ப்பால் நரம்பு கயிறுஆக மூளைளன்பு தோல்போர்த்த குப்பாயம் புக்கு இருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேஒ எப்பா லவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஒ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (2)