பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஆசைப் பத்து சீவார்ந்து ஈமொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குருமணியே தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிதுஎன் முகம் நோக்கி ஆ ஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (3) மிடைந்து எலும்பு ஊத்தைமிக்கு அழுக்குஊறல் வீறுஇலி நடைக்கூடம் தொடர்ந்துளனை நலிய துயர்உறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே உடைந்து நைந்துஉருகி உள்ஒளி நோக்கி உன் திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே (4) அளிபுண் அகத்து புறம்தோல் மூடி அடியேன் உடையாக்கை புளியம்பழம் ஒத்து இருந்தேன் இருந்தும் விடையாய் பொடிஆடி எளிவந்து என்னை ஆண்டு கொண்ட என்ஆர் அமுதே ஒ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (5) 598