பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஆசைப் பத்து எய்த்தேன் நாயேன் இனிஇங்கு இருக்க கில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச் சேவடியானே முத்தா உன்தன் முகஒளி நோக்கி முறுவல் நகைகான அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (6) பாரோர் விண்ணோர் பரவி எத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே பேர் ஆயிரமும் பரவித் திரிந்து ாம்பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (7) கையால் தொழுதுஉன் கழல்சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யாது என்தன் தலைமேல் வைத்துஎம் பெருமான் பெருமான் என்று ஐயா என்தன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகுஒப்ப ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (8) oDO