பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அதிசயப் பத்து எண்ணி லேன்திருநாமம் அஞ்சுஎழுத்தும்என் ஏழைமை அதனாலே நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணிலே பிறந்து இறந்துமண் ஆவதற்கு ஒருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (6) பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து உளுத்துஅசும்பு ஒழுகிய பொய்க்கூரை இத்தை மெய்எனக் கருதிநின்று இடர்க்கடல் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (7) நீக்கி முன்னனைத் தன்னொடு நிலாவகை குரம்பையில் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம்இன்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்அறத் துகள் அறுத்து எழுதரு சுடர்ச்சோதி __ ஆக்கி ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (8) 610