பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. புணர்ச்சிப் பத்து நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டு கொண்ட என்ஆர் அமுதை அள்ளுறு உள்ளத்து அடியார்முன் வேண்டும் தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் துரவிப் பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே (3) அல்லிக் கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை _ நிறை இன் அமுதை அமுதின் சுவையை புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே (4) திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும்மாலும் அகழப் பறந்தும் காண மாட்டா அம்மான் இம்மாநிலம் முழுதும் நிகழப் பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மைஎல்லாம் புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே (5)