பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. புணர்ச்சிப் பத்து பரிந்து வந்து பரமஆனந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமால் உற்றேன் என்றுஎன்று சொரிந்த கண்ணிர் சொரிய உள்நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்துஅன்புஆய்ப் புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மனியைப்புணர்ந்தே நினையப் பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பைத் தனை ஒப்பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டம் கணையக் கண்ணிர் அருவி பாயக் கையும் கூப்பி கடிமலரால் புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே நெக்குநெக்குஉள் உருகிஉருகி நின்றும் இருந்தும் கிடந்தும்எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தால் கூத்துநவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச், சிலிர்சிலிர்த்துப் புக்கு நிற்பது என்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 620 (6) (7) (8)