பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீர் அடியோம் உன்அடியார் தாள்பணிவோம் ஆங்குஅவர்க்கே பாங்கு ஆவோம் அன்னவரே எம்.கணவர் ஆவார். அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்னவகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் எல் ஒர் எம்பாவாய் (9) பாதாளம் ஏழினும் கீழ்சொல் கழிவு பாதமலர் போதுஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே பேதை ஒரு பால் திருமேனி ஒன்று அல்லன் வேத முதல் விண்னோரும் மண்ணும் துதித்தாலும் ஒத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் கோதுஇல் குலத்து அரன்தன் கோயில் பினாப் பிள்ளைகாள் எது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் ஏது அவனைப்பாடும் பரிசு எல் ஒர் எம்பாவாய் (10) 352