பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அருட் பத்து துப்பனே துரயாய் தூயவெள் நீறு துதைந்துஎழு துளங்குஒளி வயிரத்து ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறுசுவை அளிக்கும் ஆர்.அமுதே செப்பம்,ஆம் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (6) மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேவலர் புரங்கள் மூன்று எரித்த கையனே காலால் காலனைக் காய்ந்த கடும்தழல் பிழம்புஅன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (7) முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டுஅறா மலர்பறித்து இறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார்தமக்குப் பரகதி கொடுத்து அருள் செய்யும் சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே - (8) 540