பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை மொய்ஆர் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் செய்யா வெள்நீறுஆடி செல்வா சிறுமருங்குல் மை.ஆர் தடம் கண் மடந்தை மனவாளா ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் உய்வார்கள் உய்யும்வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம் எய்யாமல் காப்பாய்எமை எல் ஒர் எம்பாவாய் (11) ஆர்த்த பிறவித் துயிர்கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தி ஆடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டுஆர்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான்பொன்பாதம் ஏத்தி இரும்கனை நீர் ஆடு எல் ஓர் எம்பாவாய் (12)