பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. குழைத்த பத்து வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின்அல்லால் வேண்டும் பரிசுஒன்று உண்டுஎன்னில் அதுவும் உன்தன் விருப்பு அன்றே (6) அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றுஒர் இடையூறு எனக்குஉண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே (7) நாயின் கடைஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டு இருக்கும் அதுஅன்றி ஆயக் கடவேன் நானோ தான் என்னதோ இங்கு அதிகாரம் காயத்து இடுவாய் உன்னுடைய கழல்கீழ் வைப்பாய் கண்நுதலே (8) 6BO