பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தேழாவது பிடித்த பத்து முத்திக் கலப்புரைத்தல் (திருத்தோணிபுரம்) ஆசிரிய விருத்தம் உம்பர்கட்கு அரசே ஒழிவுஅற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு வம்புஎனப் பழுத்துஎன் குடிமுழுது ஆண்டு வாழ்வுஅற விாழ்வித்த மருந்தே செம்பொருள் துணிவே சீர்உடைக் கழலே செல்வமே சிவபெரு மானே எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (1) விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே முடைவிடாது அடியேன் மூத்துஅற மண்,ஆய் முழுப்புழுக் குரம்பையில் கிடந்து கடைபடா வண்ணம் காத்துளனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (2) 716