பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பிடித்த பத்து அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு.வண்டு அளவுஇலா ஆனந்தம் அருளிப் பிறவிவேர் அறுத்து என்குடி முழுதுஆண்ட பிஞ்ஞகா பெரியளம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெரு மானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (6) பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றும்ஆறு அடியனேற்கு அருளிப் பூசனை உகந்துஎன் சிந்தையுள் புகுந்து பூம்கழல் காட்டிய பொருளே தேசுஉடை விளக்கே செழும்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (7) அத்தனே அண்டர் அண்டம்ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறுஇல்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே பித்தனே எல்லா உயிரும்.ஆய்த் தழைத்து பிழைத்துஅவை அல்லை.ஆய் நிற்கும் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (8) 720