பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. சென்னிப் பத்து வம்பனாய்த்திரி வேனை வாஎன்று வல்வி னைப்பகை மாய்த்திடும் உம்பரான் உலகுஊடு அறுத்துஅப் புறத்தன் ஆய்நின்ற எம்பிரான் அன்பர் ஆனவர்க்கு அருளி மெய்யடி யார்கட்கு இன்பம் தழைத்திடும் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே முத்தனை முதல் சோதியை முக்கண் அப்பனை முதல் வித்தினைச் சித்தனைச் சிவலோகனைத் திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர்காள் இங்கே வம்மின்நீர் உங்கள் பாசம் தீரப் பணிமினோ சித்தம் ஆர்தரும் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே ום (9) (10)