பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவம்மானை இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவன் அவனிவந்தருளி எம்தரமும் ஆட்கொண்டு தோள்கொண்ட நீற்றன்.ஆய்ச் சிந்தனையை வந்துஉருக்கும் சீர்ஆர் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேல்கொண்டான் தந்த அந்தம்இலா ஆனந்தம் பாடுதும்காண் அம்மானாய் (3) வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும் கான்நின்று வற்றியும் புற்றுஎழுந்தும் காண்புஅரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந்து உரோமங்கள் உள்ளேஉயிர்ப்பு எய்து தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய் (4) கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சுஏற்றிக் கல்லைப் பிசைந்து கனிஆக்கி தன்கருணை வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லைநகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதும்காண் அம்மானாய் (5) 370