பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவம்மானை கேட்டாயோ தோழி கிறிசெய்த ஆறுஒருவன் தீட்டுஆர் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனஎல்லாம் காட்டிச் சிவம் காட்டித் தாள்தாமரை காட்டித் தன்கருணைத்தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த ஆள்தான் கொண்டுஆண்டவா பாடுதும்காண் அம்மானாய் (6) ஒயாதே உள்குவார் உள்இருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதுஇருக்கும் பாதியனை நாய்ஆன நம்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகுஎழும் ஆயானை ஆள்வானைப் பாடுதும்காண் அம்மானாய் (7) பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீரத்தி வியன் மண்டலத்து ஈசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதும்காண் அம்மானாய் (8) 372