பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவம்மானை துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டம் கரியான் செம்மேனியான் வெள்நீற்றான் அண்டம்முதல் ஆயினான் அந்தம்இலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழஅடியார்க்கு ஈந்தருளும் அண்டவியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் (9) விண் ஆளும் தேவர்க்கும் மேல்ஆய வேதியனை மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்புஆகி நின்றானைத் தண்ஆர் தமிழ்அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் பெண் ஆளும் பாகனைப் பேணு பெருந்துறையில் கண்ஆர் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய் (10) செப்புஆர் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாள்.அடைந்தார் நெஞ்சுஉருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்புஆர் சடைஅப்பன் ஆனந்த வார்கழலே ஒப்புஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள்இருக்கும் அப்பாலைக்கு அப்பாலைப் பாடுதும்காண் அம்மானாய் (11) 374