பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவம்மானை மைப்பொலியும் கண்ணிகேள் மால்அயனோடு இந்திரனும் எப்பிறவியும் தேட என்னையும்தன் இன் அருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவாமே காத்து மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் மெய்யே நிலைபேறுஆய் எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் விடுஆகும் அப்பொருள்.ஆம் நம்சிவனைப்பாடுதும்காண் அம்மானாய் (12) கைஆர் வளைசிலம்பக் காதுஆர் குழைஆட மை.ஆர் குழல்புரளத் தேன்பாய வண்டுஒலிப்பச் செய்யானை வெள்நீறு அணிந்தானைச் சேர்ந்துஅறியாக் கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும்காண் அம்மானாய் (13) ஆனை.ஆய்க் கீடம்ஆய் மானுடர்.ஆய்த் தேவர்ஆய் ஏனைப் பிறவாய்ப் பிறந்துஇறந்து எய்த்தேனை ஊனையும் நின்றுஉருக்கி என்வினையை ஒட்டுஉகந்து தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்துஇனிய கோன்அவன் போல்வந்து என்னைத் தன்தொழும்பில் கொண்டருளும் வானவன் பூம்கழலே பாடுதும்காண் அம்மானாய் (14) 376