பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற் சுண்ணம் உலக்கை பல ஒச்சுவார் பெரியர் உலகம் எலாம் உரல்போதாது என்றே கலக்க அடியவர் வந்துநின்றார் காண உலகங்கள் போதாது என்றே நலக்க அடியோமை ஆண்டு கொண்டு நாள் மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே சூடகம் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத் தொண்டர்குழாம்எழுந்து ஆர்ப்பஆர்ப்ப நாடவர் நம்தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்பப் பாடக மெல்அடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்ன கோவுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே வாள்தடம்கண் மட மங்கை நல்லிர் வரிவளை ஆர்ப்ப வண்கொங்கை பொங்கத் தோள்திரு முண்டம் துதைந்து இலங்கச் சோத்தெம் பிரான் என்று சொல்லிச்சொல்லி நாள்கொண்ட நாண் மலர்ப்பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 390 (6) (8)