பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற் சுண்ணம் வையகம் எல்லாம் உரல்அது ஆக மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்எனும் மஞ்சள் நிறைய ஆட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச் செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல், வண்டுஇனம் ஆடஆடச் சித்தம் சிவனொடும் ஆடஆடச் செம்கயல் கண் பனி ஆடஆடப் பித்து எம்பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொடு ஆடஆட ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே மாடு நகைவாள் நிலா எறிப்ப வாய்திறந்து அம் பவளம் துடிப்பப் பாடுமின் நம்தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெருமானைத் தேடிச் சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத்து ஆடினானுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 392 (9) (10) (fi)