பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற் சுண்ணம் மைஅமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யினை மெய்யர் மெய்யைப் போதுஅரிக் கண் இணைப் பொன்தொடித்தோள் பை.அரவு அல்குல் மடந்தைநல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே (12) மின்இடைச் செம்துவர் வாய்க் கரும்கண் வெள்நகைப் பண்அமர் மென்மொழியிர் என்னுடை ஆர்.அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம்ஐயன் தாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் பொன் திருச்சுண்ணம் இடித்தும் நாமே (13) சங்கம் அரற்றச் சிலம்பு ஒலிப்பத் தாழ்குழல் சூழ்தரும் மாலைஆடச் செம்கனிவாய் இதழும் துடிப்பச் சேயிழை யீர் சிவலோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும் கற்றைச் சடைமுடியான் கழற்கே பொங்கிய காதலில் கொங்கைபொங்கப் பொன்திருச்சுண்ணம் இடித்தும் நாமே (14) 394