பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற் சுண்ணம் ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற்கு அரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனைப் பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நாத்தழும்பு ஏற வாழ்த்திப் பானல் தடம்கண் மடந்தைநல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ஆவகை நாமும் வந்து அன்பர்தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல் தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டும்செல்வச் சேவலம் ஏந்திய வெல்கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே தேன்.அக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வான்.அகமா மதிப்பிள்ளையாடி மால்விடை பாடி வலக்கை ஏந்தும் ஊன் அக மாமழுச் சூலம்பாடி உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனகம் ஆகநஞ்சு உண்டல் பாடிப் பொன்திருச் சுண்ணம் இடித்தும் நாமே 396 16) (7)