பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற் சுண்ணம் அயன்தலை கொண்டு செண்டு ஆடல் பாடி - அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயம்தனைக் கொன்றுஉரி போர்த்தல் பாடிக் காலனைக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயம்தனைப் பாடி நின்று ஆடிஆடி நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே (18) வட்டமலர்க் கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழும்தென் தில்லைபாடிச் சிற்றம்பலத்து எங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்ங்ணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின்று ஆடும் அரவம்பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே (19) வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு சோதியும்ஆய் இருள் ஆயினார்க்குத் துன்பமும்ஆய் இன்பம் ஆயினார்க்குப் பாதியும்ஆய் முற்றும் ஆயினார்க்குப் பந்தமும்ஆய் விடும் ஆயினார்க்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே (20) 398