பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்புஎன்று இவைஇரண்டின் மயக்குஅறுத்த கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி (9) நோய்உற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்குஇருந்து நாய்உற்ற செல்வம் நயந்து அறியா வண்ணம் எல்லாம் தாய் உற்று வந்துஎன்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றுஊதாய் கோத்தும்பி (10) வன்நெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கல்நெஞ்சு உருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்அம் கழலுக்கே சென்றுஊதாய் கோத்தும்பி (11) 408