பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி நாயேனைத் தன்அடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேனது உள்ளப்பிழை பொறுக்கும் பெருமையனைச் சீஏதும் இல்லாதுஎன் செய்பணிகள் கொண்டருளும் தாய்ஆன ஈசற்கேசென்று ஊதாய் கோத்தும்பி (12) நான்தனக்கு அன்பு:இன்மை நானும்தானும் அறிவோம் தான்என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம்அறிவார் ஆன கருணையும் அங்குஉற்றேதான்.அவனே கோன் என்னைக்கூடக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி (13) கருஆய் உலகினுக்கு அப்புறம்ஆய் இப்புறத்தே மருஆர் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருஆய் மறைபயில் அந்தணன் ஆய் ஆண்டு கொண்ட திருஆன தேவற்கேசென்று ஊதாய் கோத்தும்பி (14) 41 O