பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி நானும் என்சிந்தையும் நாயகனுக்கு எவ் இடத்தோம் தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேன்.உந்து சேவடிக்கேசென்று ஊதாய் கோத்தும்பீ (15) உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட் கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி (16) பொய் ஆய செல்வத்தே புக்கு.அழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயா என் ஆர் உயிரே அம்பலவா என்று.அவன்தன் செய்ஆர் மலர்அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பி (7) 412