பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் பால்வெள்ளை நீறும் பசும்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தெரிக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ (18) கள்ளன் கடியன் கலதிஇவன் என்னாதே வள்ளல் வரவர வந்து ஒழிந்தான் என்மனத்தே உள்ளத்து உறுதுயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ (19) பூமேல் அயனோடு மாலும் புகல்அரிது என்று ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேல் தவிசு இட்டு நன்றாய்ப் பொருட்படுத்தத் தீமேனி யானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி (20) 414