பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் அரை ஆடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல் வரைஆடு மங்கைதன் பங்கொடும்வந்து ஆண்டதிறம் உரைஆட உள்ஒளிஆட ஒள்மாமலர்க் கண்களில்நீர்த் திரை ஆடுமா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ (6) ஆஆ. அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரியசிவன் வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான் யூஆர் அடிச்சுவடு என்தலைமேல் பொறித்தலுமே தேவானவா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ (7) கறங்குஒலை போல்வது ஒர்காயப் பிறப்போடு இறப்புஎன்னும் அறம் பாவம் என்றுஇரண்டு அச்சம்தவிர்த்து என்னைஆண்டுகொண்டான் மறந்தேயும் தன்கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அத் திறம் பாடல் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ (8) 422