பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருவாசகம் - சில சிந்தனைகள் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன்று அருளினை போற்றி இரும்புலன் புலர இசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவி றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்புஒன்று அறியா நாயேன் குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி. திருச்சிற்றம்பலம் 210 215 220 225