பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 297 பட்டனவே தவிர, ஏனைய நேரமெல்லாம் தத்தம் வழியே சென்றன. அவற்றை அடக்கி ஆளுதலில் பல பிரச்சனைகள் தோன்றின. ஒன்றை அடக்கினால் மற்று ஒன்று விரிந்து எழுவதும், இவற்றிற்கு மூலமாகவுள்ள மனம் இந்த ஐந்திற்கும் அப்பாற் செல்வதும் அவர் அறிந்தவையே ஆகும். இதற்கு என்றேனும் விடிவுகாலம் உண்டோ என்று கருதியிருந்த அடிகளாருக்குக் குரு தரிசனம் கிடைத்தவுடன் இப்புலன்கள் அடங்கி, ஒடுங்கி அவர் விரும்பிய வழியே சென்றன. இதனையே முன்னரும் நன்புலன்'(82) என்றார். அதே கருத்தைத்தான் இங்கே 'இரும்புலன் புலர' என்றார். இப் புலர்தலுக்குக் காரணம் தாமன்று; எதிரேயுள்ள குருவின் திருவருளே என்பார் 'இசைந்தனை என்றார். 'படியுறப் பயின்ற பாவக என்ற அடிக்குத் திருவாதவூரர் புராணத்தை அடிப்படையாகக்கொண்டு, குருவாக வந்தவர் சில நாட்கள் அடிகளாருடன் தங்கினார் என்று பொருள் கூறுவர். அவ்வாறு தங்கித்தான் திருவாதவூரரை மணிவாசகராக மாற்றமுடிந்தது என்றால் அது இருவருடைய பெருமைக்கும் ஏற்புடையதன்று. திருப்பெருந்துறை நிகழ்ச்சி முழுவதும் ஒரு சில நாழிகைக்குள் நடந்து முடிந்தது என்பதே ஏற்புடைய தாகும். இங்கே படியுறப் பயின்ற பாவக என்பது கரிக் குருவியாக வந்தது, தாய்ப் பன்றியாக வந்தது முதலிய கதைகளில் இறைவன் வெவ்வேறு வடிவுகொண்டு இம் மண்ணினிடை வந்து உயிர்கட்கு அருள் புரிந்தான் என்பதையே குறிக்கும். . நரகொடு சுவர்க்கம் நால் நிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி ஒழிவு அற நிறைந்த ஒருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 20