பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 27 மாரனை வெல்லும் வீர நின் அடி திநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி (Ngogfl :t1-61-62) என்று தொடங்கிப் பத்து அடிகளில் திருவடிப் பெருமை யைக் கூறி இறுதியாக, வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது (மணி 11-71) என்று முடிகின்றது. சாத்தனார் தமிழர் ஆதலின் பழங்காலத் தமிழர் கண்ட திருவடிப் பெருமையைப் புத்தனுக்கே ஏற்றியுள்ளார். பிற்காலத்தில் தோன்றிய பவணந்தி முனிவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அருகதேவனைக் குறிப்பிடும்போது, தாம் இயற்றிய நன்னுரலில் பின்வருமாறு பாடுகிறார்; முச்சக நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே (நன்னூல் பத-1) சைவ, வைணவர்கள் கூறிய திருவடிப் பெருமை பெளத்தர், சைனர் ஆகிய இருவரையும்கூட ஈர்த்துள்ளது என்பது தெளிவாகும். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டால் மணிவாசகப் பெருந்தகை நாதன் தாள் வாழ்க என்று கூறிய சொல் பொருத்தமுடையதே என்பது புலப்படும். - - மனித மனத்திற்கு ஒரு தனி இயல்பு உண்டு. நமக்கு உதவி செய்தவர் ஒருவரைப் புகழும்போது, அவரை விட்டுவிட்டு அங்கனம் செய்தவர் எந்த உறுப்பின் மூலம் உதவியைச் செய்தாரோ அந்த உறுப்பைப் புகழ்வதே இயல்பு மருத்துவரைப் புகழ்ந்து கூறும்போது