பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 63 பரப்பளவைக் கடந்தவன் என்ற கருத்தில்தான் எல்லை இலாதானே என்கிறார். பெருமானின் சிறப்பை எண், எல்லை என்ற இரண்டாலும் இவ்வளவுதான் என்று சொல்லுதல் இயலாத காரியம் என்பதைக் குறிக்கவே, 'எண் இறந்து, எல்லை இலாதானே என்று பாடுகிறார். 醬 பல் விருகம் ஆதிப் பறவை ஆய்ப் பாம்பு ஆகித் கல் ஆய் மனித்ர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய் ஆல் அசுரர் ஆகி முனிவர் ஆய்த் தேவர் ஆய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் (26–31) இந்நாட்டைத் தவிர ஏனைய நாடுகளில் வாழ்ந்த பெருமக்கள் பலரும் உலகிடைக் காணப்படும் பல்வேறு விலங்குகள், பறவைகள், புல், பூடு ஆகியவையிடையே ஓர் உறவுமுறை இருப்பதாக நினைக்கவேயில்லை. அன்றியும் சில சமயத்தார் மனிதனைப் படைத்த ஆண்டவன், மனிதனுடைய அனுபவத்திற்காக ஏனையவற்றைப் படைத்தான் என்று. கூறினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில், வேறுபட்ட இவ்வுயிர் இனங்களிடையே ஏதேனும் உறவு முறை இருக்குமோ என்ற ஐயம் தோன்ற, அதனை ஆராய முற்பட்டவர் உலகப் புகழ்பெற்ற டார்வின் என்ற விஞ்ஞானி ஆவார். பல்லாண்டுகள் முயன்று இவ் உயிரினங்களை ஆய்ந்த பெருமகனார் ‘கூர்தல் அறம்' (Theory of Evolution) என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ஓர் இனம் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் திடீரென்று அந்த இனமே அழிந்துபோய் மற்றோர் இனம் தோன்றுகிறது. உடற்கூறு அமைப்பில் மீன், ஆமை, பாம்பு முதலியவற்றை வரிசைப்படுத்தி இந்த இனங்கள் காலாந்தரத்தில் எப்படி ஒன்றிலிருந்தொன்று தோன்றின என்பதை ஆய்ந்தார். அவருடைய காலத்தின்