பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வேறு ஒன்றை வேண்டுமென்று கேட்கின்றார். 'உன் அருள்பெறு நாள் என்று? என்றே வருந்துவனே', என்று கூறுவதால் அடிகளாரைப் பொறுத்தமட்டில் குருவின் திருவடி தரிசனமும் இறையருளும் ஒன்றே என்ற அவரது மனோநிலையை விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மை அடியார்களைப் பொறுத்தமட்டில் திருவடி தரிசனமே வீடுபேறாகும் என்ற கருத்து சைவம், வைணவம் என்ற இரண்டிலும் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
(நாலாயிர 936)

என்னும் திருப்பாணாழ்வாரின் பாசுரப்பகுதி மேலே கூறிய கருத்தை வலியுறுத்துவதாகும்.

17.

வருந்துவன் நின் மலர்ப் பாதம் அவை
காண்பான் நாய் அடியேன்
இருந்து நல மலர் புனையேன்
ஏத்தேன் நாத் தழும்பு ஏறப்
பொருந்திய பொன் சிலை குனித்தாய்
அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத் தமியேன் மற்று .
என்னே நான் ஆம் ஆரே
13

காண்பான்-காண்பதற்கு. பொற்சிலை-மேருவாகியவில்.

திருப்பெருந்துறையில் குருதரிசனமும், குரு அருளும் கிடைத்த பிறகு அடிகளார், பெரிதும் ஈடுபட்டது குருவின் திருப்பாதங்களிலேயே ஆகும். இனி, குருவானவர் மறைந்த பிறகு அவரின் மறைவுக்கு வருந்துவதைக் காட்டிலும் தம்மைப் பெரிதும் ஈடுபடுத்திய அந்தத் திருப்பாதங்களைக் காணமுடியாமல் போய்விட்டதே என்றுதான் அடிகளார்