பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 329


அறிந்திருக்கத் தேவையில்லை. சர்க்கரையின் தன்மையைக் கூறும் வேதியியல் சமன்பாட்டினை அறியாமலும் சர்க்கரையைச் சுவைக்கமுடியும். அதேபோலச் சத்தியப் பொருளை, உண்மையை, அல்லது மெய்ம்மையை உணர்ந்துகொண்டு, அதனில் மூழ்கி அதனை அனுபவிப்பதற்கு அதன் இயல்பு, தன்மை என்பவற்றை அறிய வேண்டிய தேவையில்லை.

இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் மெய்யறிதல் என்று சொல்லாமல் மெய்யுணர்தல் என்ற தலைப்பைக் கொடுத்தனர். வள்ளுவர் காலம் தொடங்கி 13ஆம் நூற்றாண்டுவரை உண்மை என்ற சொல்லுக்குப் பதிலாக மெய் என்ற சொல்லையே தமிழ் இலக்கியம் பயன்படுத்திவந்தது என்பதை அறிதல் வேண்டும். சத்தியப் பொருள் அல்லது உண்மைப் பொருள் என்று சொல்லவேண்டிய இடத்தில் அடிகளாரும் மெய் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.

‘மெய்யே! உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ (திருவாச : 1-32) 'மெய்யா! விமலா!' (திருவாச 1-34) என்று வரும் தொடர்களில் மெய்யே என்ற சொல்லாட்சி சத்திய வடிவினனே என்ற பொருளில் அமையக் காணலாம்.

மெய்யுணர்தல் என்ற தலைப்பு, முதல் பத்துப் பாடல்களுக்குத் தரப்பெற்றிருப்பினும் சதகம் முழுவதிலும் பல இடங்களில் இது பேசப்பட்டிருப்பதைக் காணலாம். உணர்தல் என்பது தல் என்ற விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும். எனவே, உணர்தல் என்பது ஒரு செயலை அல்லது தொழிலைக் குறிக்கும் சொல் ஆகும். ஒரு தொழிலை அல்லது செயலைச் செய்தோம் என்றால், புறக்கருவிகள் ஆகிய கை, கால் முதலியவற்றைப் பயன்படுத்தித்தான் அத்தொழிலைச் செய்யமுடியும். கால்கள் மிக விரைவாகத்