பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 35


இறைவன் பிறர் அறியாமல் இவருள் புகுந்துவிட்டான். தம்மை ஆட்கொண்ட செய்தியைப் பல இடங்களில் கூறும் அடிகளார். 'புகுந்து ஆண்டான்' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக,

பொருளா என்னைப் புகுந்து ஆண்ட பொன்னே (திருவாச:385)

என்றும்,


ஆடுவித்து என் அகம் புகுந்து ஆண்டது (திருவாச:573)


என்றும்,


ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெருங்கடலே

(திருவாச 30)

என்றும் கூறியுள்ளமை நோக்கத்தக்கது.

'புகுந்து' என்ற சொல்லை 'ஆண்டான்' என்ற சொல்லோடு சேர்த்தே அடிகளார் பயன்படுத்தும் காரணமென்ன? புறத்தே இருந்து ஆட்கொண்டால் அதனை அனுபவிக்கின்ற மனித மனம் எவ்வளவுதான் அந்த அனுபவத்தில் ஈடுபட்டாலும் அது தன்னை மறந்துவிடுவதில்லை. அன்றியும், அனுபவம் என்பது அலைபோல் ஏறி இறங்கும் தன்மையுடையது ஆதலின், இறங்கிய நிலையில் மனத்தின் சேட்டைகள் ஒரோவழி வெளிப்படுதலும் இயல்பு. திருப்பெருந்துறை நாடகத்தின் பின்னர் அடிகளாரின் மனச்சேட்டை ஒரு விநாடிகூட வெளிப்படவில்லை. 'அது எதனால்' என்று நினைக்கின்றார். ஒரே ஒரு காரணத்தால்தான் அது முடியும், குரங்காட்டியைப்போலப் புறத்தே நின்று ஆட்கொண்டால் ஒருசில விநாடிகளேனும் மனக்குரங்கு தன் வேலையைச் செய்தே தீரும். அவ்வாறு நடைபெறமுடியவில்லை என்றால், ஆட்கொண்டவன் புறத்தே நின்று இவ்வனு