பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் |சிவனுடைய காருணியம்) சாழல் என்பதும் மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று என்பதைமட்டும் அறிய முடிகிறது. சிலப்பதிகார உரையுள் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டி விளக்கும் பல்வரிக் கூத்துக்களுள் சாழல் என்ற பெயரும் இடம்பெறுகிறது. திருச்சாழல், திருத்தோள்நோக்கம், என்ற இந்த இரண்டும் மகளிர் சிலர் எதிர்எதிராக நின்றுகொண்டு, கைகளை நீட்டி, குறிப்பிட்ட பாடலைப் பாடிக்கொண்டு, எதிரே உள்ளவர் கைகளைத் தட்டுவதோ அன்றி அவர்கள் தோள்களைத் தட்டுவதோ அன்றி இருவர் கையையும் மேலே தூக்கிக் கும்பிடுவதுபோலக் கையைத் தட்டிப் பிணைத்துக்கொள்வதோ இவற்றுள் அடங்கும். "எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான்” (திருமுறை: 49-2) என்று வரும் தேவாரம் சிந்திக்கத்தக்கது. தோள் வீசி நின்று ஆடும் என்று பாடலில் வருகிறதேனும் தோள்வீச்சு என்ற பொருளிலேயே கைகளை நீட்டல், மடக்கல், வளைத்தல், சுருட்டல், அரைவட்ட வடிவமாகக் கைகளை வீசுதல் முதலிய பத்து நிலைகள் பேசப்பெறுகின்றன. எனவே, அடிகளார் கூறும் சாழல், தோனோக்கம் முதலியவை கைவீச்சுக்களையே குறிப்பன என்பது தெளிவு, சாழலில் எதிரேயுள்ள ஒருத்தி ஒரு கையைத் தூக்கி ஆட்டிக்கொண்டு தன்னுடைய கேள்விக்கு விடைகூற முடியுமா? என்று கேட்பதுபோல, எதிரே உள்ளவள் கையைத் தட்டி, 'காணேடி' முதலிய சொற்களுடன்