பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 சமுதாயம் அது. அந்தச் சமுதாயத்தில் ஒத்த கருத்துடை யவர்களைத் தேடுகிறார் அடிகளார். அத்தகையவர்களைத் தேடிப் பிடித்த பிறகுதான் அவ்வாறு தேடிப்பிடித்தது தம் அறிவாற்றலால் அன்று; அதுவும் இறையருளே என்று உணர்ந்த நிலையில், இணங்கத் தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து’ என்கிறார். வணங்குவதும் வாழ்த்துவதும் இறைவனை என்று கூறாமல், தமக்கே உரிய முறையில் திருவடிகளை முன்னிலைப்படுத்தி 'வளர்கழல், வணங்கத் தலைவைத்து (அதனை) வாழ்த்த வாய் வைத்து' என்று சொல்லுகின்றார். 282. நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறி செய்துகொண்டு என்னை ஆண்ட பிரான் குணம் பரவி முறி செய்து நம்மை முழுது உடற்றும் பழ வினையைக் கிறி செய்தவா பாடிப் பூவல்லி கொய்யாமோ 8 குறிசெய்து-இலக்காக்கி. 'உண்மை அடியார்களின் பொன் அடிக்கே சென்று பொருந்தவேண்டும் என்ற குறிக்கோளை நான் ஏற்றவுடன், அதற்குரிய வழி என்ன என்று காட்டினான் (நெறி செய்து அருளி) என்னை ஆண்டபிரான். என்னைச் சுற்றிநின்று துன்பம்தரும் பழவினைகளைப் பொய்யாக்குகிறேன் என்று கூறி ஆவணம் எழுதிய அந்தப் பெருமானின் குணம் பாடிப் பூவல்லி கொய்யாமோ என்கிறார். 283. பல் நாள் பரவிப் பணி செய்ய பாத மலர் என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய் கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல் - *} இணைகள் பொன் ஆண்வா பாடி பூவல்லி கொய்யாமோ 9