பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மிகப் பழங்காலந்தொட்டே இந்நாட்டவர் அறிவு கொண்டு துணிய வேண்டிய ஒர் உண்மையை நன்கு அறிந்திருந்தனர். ஒருவர் செய்கின்ற செயலைமட்டும் வைத்துக்கொண்டு, அது நல்லது என்றோ தீயது என்றோ முடிவுக்கு வருதல் அவ்வளவு சரியானதன்று. பெரிய கத்தியை வைத்துக்கொண்டு வயிற்றைக் கிழிக்கும் மருத்து வத்தைச் செயலளவில் பார்த்தால், கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு நம் முன்னோர் கருத வில்லை. செயலின் பின்னே உள்ள செய்பவர்களின் மனநிலையை வைத்தே, நல்லது, கெட்டது என்ற முடிவுக்கு வரவேண்டும் என்று கருதினர். மருத்துவர் கத்தியால் கிழித்தாலும் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே செய்கிறார்? அதனாலேயே அச்செயலை நற்செயல் என்று போற்றுகிறோம். அதே போலச் சிவபூசைக்கு ஊறு இழைத்து, அபிடேகப் பாலைக் காலால் இடறியவன் பெருங்குற்றம் செய்துவிட்டான். இப்பொழுது அவனைத் தண்டிக்காமல் விட்டால் அவன் நரகிடைச் செல்ல வேண்டும். அது நிகழாமலிருக்கவே பாலை இடறிய காலை விசாரசருமன் வெட்டினான். தந்தையின் காலை வெட்டுவது செயலளவில் பாதகம் என்றே சொல்லப்படும். ஆனால், வெட்டியவன் நோக்கம் இந்தத் சிறுதண்டனை தந்தைக்கு அளித்து, நரகிடை வீழும். பெரும் தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்றுவதே. ஆதலின், இந்தப் பாதகச் செயல் விசாரசருமனுக்குப் பெரும் பதவி அளித்தது என்கிறார். பசியைப் போக்கச் சோறு உதவுவது போல, விசார சருமன் பிறவியைப் போக்க அவன் பாதகச் செயலே உதவிற்று என்கிறார். அதனையே பாதகமே சோறு பற்றினவா என்கிறார். தந்தையின் காலை வெட்டியது செயலளவில் மேலோட்டமாகப் பார்ப்பதற்குப் பாவச் செயலாகப்பட்டாலும், தந்தை நரகிடை வீழாமல்