பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மூவர் இராக்கதர்கள்-தாரகாகூடின், கமலாக்ஷன், வித்யுன்மாலி 6TöösLJssss. இறைவனை எண்ணிக்கொண்டிருத்தலையே தம் கடமையாகக் கொண்ட திரிபுரத்திலிருந்த அசுரர்கள் மூவரும் அது எரிந்த காலத்தில் அதனோடு அழியாது உயிர் பிழைத்து இறைவனுக்கு வாயில் காவலராக இருந்து வருகின்றனர். இவர்கள் காலம் தொடங்கி, கணக்கில்லாத இந்திரர்கள், பிரமர்கள், மால்கள் ஆகியோர் மாண்டனர். இறையருளைப் பெறாதவர்கள் மறுபடியும், மறுபடியும் பிறத்தலையும், அதனைப் பெற்றவர்கள் சாவா மூவாப் பெருவாழ்வு வாழ்தலையும் இப்பாடல் குறிக்கின்றது. 324. பங்கயம் ஆயிரம் பூவினில் ஒர் பூக் குறைய தம் கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே சங்கரன் எம் பிரான் சக்கரம் மாற்கு அருளிய ஆறு எங்கும் பரவி நாம் தோள் நோக்கம் ஆடாமோ 10 இடந்து-தோண்டி. திருமாலுக்குச் சக்கரம் அருளியதைக் கூறுகிறது இப்பாடல். - 325. காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன் நா. மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ 11 எரி-அக்கினித் தேவன். எச்சன்-யாகத்தை நடத்திய ஆச்சாரியன். தூய்மைகள் செய்தவா-அவரவர்கள் செய்த சிவாபராதத்தைப் போக்கிப் புண்ணிய மேவச்செய்தது. தக்கன் யாகம் பற்றிய பாடல் இது