பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கருதினர் இத்தமிழர். ஆதலின் முதன்முதலில் . தொண்டிரடிப்பொடி ஆழ்வார் அரங்கனுக்குப் பள்ளியெழுச்சிப் பாடினார் (நாலா. திவ்: 917-926) எட்டாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்த அடிகளார், தம் வாழ்க்கையைத் திசை திருப்பிய பெருந்துறை நாயகனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றார். கடவுளுக்குரிய திருப்பள்ளியெழுச்சி ஆதலால், சூதர்களுக்குப் பதிலாக, அடியார்கள் நின்று, இறைவன் பெருமையைப் பாடித் துயிலெழ வேண்டும் என்று அவனை, வேண்டிக்கொள்வதாக அமைந்துள்ளன இப்பாடல்கள். திரோதானம் என்ற சொல் மறைத்தல் என்ற தொழிலுக்குரிய மற்றொரு பெயராகும். அதனோடு சுத்தி என்ற சொல் சேர்க்கப் பெற்றதால், இவை இரண்டும் சேர்ந்து எவ்விதப் பொருளையும் தராமல் உள்ளன. சாத்திர அடிப்படையில் காணப்பெறும் சில கலைச் சொற்களைத் திருவாசகத்தில் புகுத்தவேண்டும் என்று நினைந்து யாரோ புகுத்திய சொற்களாகும் இவை. 368. போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொன்டு நின் திருவடி தொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ஏற்று உயர் கொடி உடையாய் எமை உடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளயே f வாழ் முதல்-வாழுகைக்கு அடிப்படை. ஏற்றி-தூவி, எழில்-அழகு. ஏறு-இடபம், எனை உடையாய்-அநாதியாகவே என்னை ஆளாக உடையவனே. பள்ளி-படுக்கை,