பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3

பதிலாகச் சிரிப்பார்கள் அது ஏன்? இவர் ஆட்கொள்ளப் பெற்றது உண்மையாயிருப்பின் இத்தகைய சாவு வந்திருக்காது. எனவே இவர் ஆட்கொள்ளப் பெற்ற பொய் என்று கூறிச் சிரிப்பார்கள். -

386. சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டு உன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வேறு இருந்து உன் திருநாமம்
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும்
தலைவா என்பார் அவர் முன்னே
நரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே 9

தேனிப்பார்-தியானிப்பார்கள். வெவ்வேறு இருந்து உன் திருநாமம் தரிப்பார்-திருவைந்தெழுத்தை ஒதுவார்கள். நரிப்பாய்-துன்புற்று இருத்தல். இது பிராந்திய வழக்குச் சொல்.

இப்பாடலின் முதல் மூன்று அடிகளில் சொல்லப் பெற்ற சொற்களுக்கு நேரிடையாச் சொற்பொருள் கண்டு கூறுதல் பொருத்தமுடையது அன்று. இறையனுபவ முதிர்ச்சியில் விளையும் ஆனந்த வெளிப்பாடு அல்லது இறைப்பிரேமைபற்றிக் (divine ecstasy) கூறும் சொற்களாகும் இவை. இதன் விரிவை திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி (1) பக்கம் 207, 208ல் காணலாம்.

சாதாரணமாக, ஒருவரோ பலரோ சிரிக்கின்றார்கள் களிக்கின்றார்கள் என்று கூறினால், அதற்குரிய காரணம் ஏதோ ஒன்றிருத்தல் வேண்டும். உள்ளத்துள் மகிழ்ச்சியை உண்டாக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றால், அங்கே சிரிப்புத் தோன்றும். அந்த நிகழ்ச்சி இன்னும் ஆழமாகச் சென்று ஆழ்மனத்தைத் தொட்டால் களிப்புத் தோன்றும். சிரிப்பு, களிப்பு இரண்டையும் தாண்டி உள்ளத்தின் ஆழமான பகுதியில் ஒரு தாக்கம் ஏற்படும்பொழுது,