பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களும், இந்திய இரயில்வேயில் மின்னியல் தலைமைப் பொறியாளராக இருந்து ஒய்வுபெற்ற திரு. C. P. கெளரிசங்கர் அவர்களும், திருமதி ஞா. மீரா அவர்களும் ஆவர். எழுதி முடித்த பின்னர் ஒவ்வொரு வரியாகப் பார்த்து தடை விடைகளை எழுப்பி ஒரு முழுவடிவம் பெறுமாறு செய்ததுடன், படிகளைத் திருத்தும் பணியையும் மேற் கொண்டவர்கள் இதய மருத்துவ நிபுணர் டாக்டர். ந. சிவராசன், முனைவர். ம. ரா. போ. குருசாமி (கோவை), பொறியாளர் திரு. C. P. கெளரிசங்கர், திரு. ச. மார்க்கண்டு என்போர் ஆவர். இவர்கள் அனைவருக்கும் மணிவாசகப் பெருமான் இன்னருளைப் பொழிந்து வாழ்த்துமாறு அப்பெருமானின் திருவடிகளை இறைஞ்சுகின்றேன். 'திருவாசகம்-சில சிந்தனைகள் இரண்டாவது பகுதிக்கு ‘எங்கள் பிராட்டியும் எங்கோனும் போற்றிசைந்த பொங்கு மடு என்ற திருவெம்பாவை பாடலினை விளக்குமுறையில் முகப்புப் படம் தீட்டியவர் ஓவியர் பத்மவாசன் ஆவார். அதேபோல இப்பகுதிக்கு, உன்னை உவப்பன் குயிலே உன் துணைத் தோழியும் ஆவன்' என்ற குயிற் பத்துப் பாடலை அடித்தளமாகக் கொண்டு படம் வரைந்துள்ளார். தெய்வப் படங்கள் தீட்டுவதில் ஈடிணையற்று விளங்கும் ஒவியர் திரு. பத்மவாசனுக்கு மணிவாசகப் பெருமான் திருவருள் பொழிவதாக என அப் பெருமானின் திருவடிகளை இறைஞ்சுகிறேன். வழக்கம்போல இதனை நன்முறையில் அச்சுக்கோத்துத் தந்த சிவசக்தி கணினி அச்சுக்கோப்பாளர்களுக்கும் மணிவாசகரின் இன்னருள் பாவிப்பதாக சிறப்பாக நூலை வெளியிட்ட கங்கை புத்தக நிலைய உரிமையாளர் திரு. திருநாவு. இராமநாதன் அவர்களுக்கு மணிவாசகரின் நல்லருள் கிட்டுவதாக சென்ు% அ.ச.ஞானசம்பந்தன் 원g శ 3. 演