பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 463. துப்பனே தூயாய் தூய வெள் நீறு - - துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே 6 'உன்னை உள்குவார் மனத்தில் உறுசுவை அளிக்கும் ஆர் அமுதே' என்ற தொடர் மிகச் சிறந்த ஒரு பொருளைத் தந்துநிற்கின்றது. 'உள்குவார்’ என்பது எதிர்காலத்தை உணர்த்தும் சொல். உள்கினவர் இறந்த காலம்) உள்ளத்துள் அமுதாக நிற்பவன் என்று பலரும் கூறியுள்ளனர். அதனை மாற்றி, அடிகளார் உள்குவார்' என்ற எதிர்காலச் சொல்லைப் பெய்ததன் மூலம், உள்குவதற்கு முன்னரேகூட உள்கவேண்டும் என்ற நினைவு வந்தவுடனேயே அந்நினைவிற்குத் துணையாக நின்று மேலும் உள்குமாறு செய்து அவர்கள் உள்ளத்துள் அமுதமாக ஊறிநிற்கின்றான் என்ற அரிய கருத்தைப் பெறவைக்கின்றார். 464. மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேவலர் புரங்கள் மூன்று எரித்த கையனே காலால் காலனைக் காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே 7